இயக்குநர் அட்லீ இயக்கத்தில் நடிகர்கள் விஜய், எஸ்.ஜே. சூர்யா, நித்யா மேனன், சமந்தா, காஜல் அகர்வால் ஆகியோர் நடிப்பில் உருவான மெர்சல் திரைப்படம் பல்வேறு தடைகளை தாண்டி இன்று வெளிவந்தது. இதனை ரசிகர்கள் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.
இந்த திரைப்படத்தின் வருகையை முன்னிட்டு சென்னையில் விஜய் ரசிகர்கள் திரையரங்கம் முன்பு பட்டாசுகள் வெடித்தும், விஜயின் கட் அவுட்டிற்கு பாலபிஷேகம் செய்தும் வரவேற்றனர். மேலும் சென்னை ராயபுரத்தில உள்ள திரையரங்கம் ஒன்றில் தலைமைச்செயலகம் போன்று செட் அமைத்து, விஜய் அரசியலுக்கு வரவேண்டும் என அழைப்பு விடுத்தனர்.