மறைந்த தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மருத்துவனையில் அனுமதிக்கப்பட்ட மறுதினம் சுயநினைவுடனேயே இருந்தார் என்ற தகவல்கள் வெளிவந்து பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதா திடீர் உடல்நலக்குறைப்பாட்டினால் சுயநினைவு நிலையை இழந்து விட்டதாக கூறப்பட்டு, கடந்த வருடம் செப்டம்பர் 22ஆம் திகதி அப்பலோ மருத்துவமனையின் அனுமதிக்கப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து அவருக்கு சுயநினைவு மீளத் திரும்பவில்லை என மருத்துவமனைத்தரப்பும், ஜெயாவை வைத்தியசாலையில் அனுமதித்தவர்கள் சார்பிலும் தெரிவிக்கப்பட்டது.
எனினும் கடந்த வருடம் செப்டம்பர் 23ஆம் திகதி அப்போது தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக நியமிக்கப்பட்ட வித்யாசாகர் ராவிற்கு அன்றைய தினம் ஜெயலலிதா தனது கைப்பட “பெஸ்ட் விஷஸ்” (இனிய வாழ்த்துக்கள்) என எழுதியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன்காரணமாக ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மறுதினம் சுயநினைவுடனேயே இருந்தார் என்பது தெரியவந்து விட்டதாக கூறப்படுகின்றது.
இதன்படி சுயநினைவுடன் இருந்த ஜெயலலிதாவிற்கு சுயநினைவு இல்லை என்ற பொய்யான தகவல்கள் பரப்பப்பட்டது ஏன்?, முன்னுக்கு பின் முரண்பட்ட தகவல்கள் ஏன் வெளிப்படுத்தப்பட்டன என்ற பலவித கேள்விகள் எழுப்பப்பட்டுள்ள நிலையில் ஜெயா மர்ண மர்மம் குறித்து புதுத் தகவல்கள் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.