அரசியல் கைதிகளின் விடுதலையை விரைவுபடுத்தும் நோக்கிலேயே அவர்களுக்கு எதிரான வழக்குகள் அநுராதபுரத்துக்கு மாற்றப்பட்டதாக அமைச்சர் சாகல ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தனால் நாடாளுமன்றில் இன்று முன்வைக்கப்பட்ட சபை ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதன் போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், “பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் 2015ஆம் ஆண்டு 108 பேர் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், அவர்களில் 40 பேர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
தற்போது 78 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 63 பேர் தமிழர்கள். ஏனையவர்கள் சிங்களம் மற்றும் முஸ்லிம்கள். விடுதலை செய்யப்படாதவர்களின் வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன.
இதனிடையே, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை விரைவுபடுத்தும் நோக்கிலேயே அவர்களுக்கு எதிரான வழக்குகள் அநுராதபுரத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. அதில் எவ்விதமான உள்நோக்கமும் கிடையாது என அவர் மேலும் கூறியுள்ளார்.