அமெரிக்க அதிபர் டிரம்ப், வெள்ளை மாளிகையில் தீபாவளியை சிறப்பாக கொண்டாடினார். இந்தியர்களின் பண்டிகையான தீபாவளி உலகின் பெரும்பாலான் இடங்களிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தவகையில் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ், காலத்திலிருந்து வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாடப்பட்டு வருகின்றது.
அதேபோல், இந்த வருடம், வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் நடந்த தீபாவளி பண்டிகையில், அதிபர் டிரம்ப் உடன், நிக்கி ஹாலே மற்றும் அமெரிக்க அரசில் உயர் பதவியில் இருக்கும் இந்திய வம்சாவளியினர். அமெரிக்க தொலை தொடர்பு குழு தலைவர் அஜித் பை, அதிபரின் முதன்மை துணை பத்திரிகை செயலர் ராஜ் ஷா ஆகியோரும் கலந்து கொண்டனர்.