ரஷ்யாவில் நடைபெற்று வரும் தேசிய இளைஞர் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இலங்கை பிரதிநிதிகள் சென்றுள்ளனர்.
இளைஞர் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக 65 வயதுடைய பிரதிநிதி ஒருவரும் சென்றுள்ளார்.
சுய தொழில் வேலை வாய்ப்பு சங்கத்தின் தலைவராக மஹிந்த கஹதகமகே என்பவரே இவ்வாறு ரஷ்யாவுக்கு சென்றுள்ளார்.
அவர் அங்கு சென்று எடுத்து கொண்ட புகைப்படங்கள் பேஸ்புக் உட்பட சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளன.
65 வயதான மஹிந்த கஹதகமகே, இளைஞர் மாநாட்டில் கலந்து கொள்ளச் சென்றமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் கஹதகமகே ரஷ்யா சென்றமை தொடர்பான தகவல் உண்மைக்கு புறம்பானது என தெரிவிக்கப்பட்டிருந்து. எனினும் அவரது புகைப்படங்கள் அதனை உறுதி செய்துள்ளதாக கூறப்படுகின்றது.