எனக்கு பார்ட்னர் இருக்கு, மனம் திறந்த ஓவியா!

“சென்னை: ஆரவை காதலித்து தோல்வி அடைந்த ஓவியாவுக்கு ஒரு பார்ட்னர் இருக்காம்.தீபாவளி ஸ்பெஷலாக சன் டிவியில் அன்புடன் ஓவியா நிகழ்ச்சி ஒளிபரப்பானது. இதில் நடிகை ஓவியா கலந்து கொண்டு மனம் திறந்து பேசினார். ரசிகர்களுடன் சேர்ந்து பாட்டுக்கு டான்ஸ் ஆடினார்.

19-1508392044-oviyae5tரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார். நிகழ்ச்சியில் ஓவியா கூறியதாவது,

கொண்டாட்டம்

தீபாவளி என்று நான் கொண்டாடுவது இல்லை. தினம் தினம் எனக்கு தீபாவளி தான். எனக்கு புஸ்வானம் தான் மிகவும் பிடித்த பட்டாசு. எப்பொழுது நினைக்கிறேனோ அன்று தீபாவளி கொண்டாடுவேன்.

படம்

நான் காஞ்சனா படத்தில் மட்டும் தான் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளேன். ஒரே நேரத்தில் பல படங்களில் நடிக்க முடியாது. நான் எந்த போட்டியிலும் இல்லை.

பணம்

வருமானத்திற்கு ஒரு வேலை தேடியபோது மாடலிங் செய்தேன். பின்னர் களவாணி படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்து நடிகையானேன். இப்போ எனக்கு ஒரு பார்ட்னர் இருக்கு. அது என் நாய்.

ரஜினி

தல, தளபதி இரண்டு பேருமே எப்பொழுதுமே மாஸ். அவர்கள் இரண்டு பேரும் பிடிக்கும். அனைவரையும் எனக்கு பிடிக்கும். தல படத்தில் எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் சரி வேலைக்காரியாகக் கூட நடிப்பேன் என்றார் ஓவியா.