ஜெயாவுக்கு எதிராக களம் இறங்கிய எடப்பாடி.!!! இனிமேல் இப்படித்தான்.!!!

கடந்த வாரம் சில நாட்கள் எடப்பாடி சேலத்தில் தங்கி இருந்தார். அப்போது எதேச்சையாக, ஜெயா டிவி பார்த்திருக்கிறார்.

ஜெயா டிவி செய்திகளில், முழுக்க முழுக்க எடப்பாடி ஆட்சிக்கு எதிராக செய்திகள் ஒளிபரப்புவதை கண்டு அவர் பெரும் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்.

eda e5அதைப் பார்த்துவிட்டு யோசித்த எடப்பாடி, உடனே போனில் யாருடனோ பேசியிருக்கிறார்.

அதன் பின்னர், சென்னை கிளம்பிவிட்டார்.

இந்த நிலையில், நான்கு நாட்களுக்கு முன்பு சேலத்தில் உள்ள கேபிள் ஆப்ரேட்டர்களுக்கு சென்னையில் இருந்து ஒரு போன் வந்துள்ளது.

அப்போது, இனி சேலம் மாவட்டத்தில் ஜெயா டிவி சம்மந்தப்பட்ட சேனல்கள் கேபிளில் வரக் கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாம்.

அதன் பின்னர், சேலம் மாவட்டத்தில் ஜெயா டிவி சேனல்கள் துண்டிக்கப்பட்டுள்ளதாம்.

அதிமுக ஆட்சியில் ஜெயா டிவியை ஒளிபரப்ப கூடாது என்று சொல்வது வேடிக்கையாக உள்ளது என்று கேபிள் ஆப்ரேட்டர்கள் பேசிக்கொள்கிறார்களாம்.