இலங்கை ஆசிரியர் சேவையிலுள்ள ஆசிரியை ஒருவர் இளைஞர் ஒருவரின் மிரட்டலுக்கு முகம்கொடுத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
களுத்துறை மாவட்டம் அழுத்கம பிரதேசத்தை சேர்ந்த ஆசிரியை ஒருவரே இந்த மோசமான நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளார்.
அழுத்கம பிரதேசத்தைச் சேர்ந்த ஆசிரியை ஒருவரின் தொலைபேசிக்கு சில வாரங்களுக்கு முன்னர் முகம் அறியாத நபர் ஒருவரிடமிருந்து அழைப்பு வந்துள்ளது. எதிர்முனையில் கவர்ச்சியாக பேசிய இளைஞருடன் குறித்த ஆசிரியை அறிமுகத்தினை ஏற்படுத்திக்கொண்டார்.
இந்த அறிமுகம் நட்பாக மாறியதால் இருவரும் தினசரி பல விடயங்கள் குறித்துப் பேசியுள்ளனர். அவற்றுள் உடுத்தும் உடை உண்ணும் உணவு மற்றும் உறங்கும் அறை குறித்தும் பேசியுள்ளனர்.
அவர்களுக்கிடையிலான நட்புறவு மேலும் நெருக்கமடையவும் பாலியல் தொடர்பான பேச்சுக்களையும் எடுத்துள்ளனர். இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்னர் இருவருக்குமிடையில் ஏற்பட்ட கசப்புணர்வினால் குறித்த இளைஞன் ஆசிரியைக்கு மிரட்டலினை விடுக்கத் தொடங்கியுள்ளார்.
அதன்படி தன்னுடன் தொலைபேசியூடாக ஆசிரியையினால் பகிர்ந்துகொள்ளப்பட்ட விடயங்கள் குறித்து, குறித்த ஆசிரியை கற்பிக்கும் பாடசாலை அதிபரிடம் முறையிடப்போவதாக கடுந்தொனியில் அச்சுறுத்தியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த குறித்த ஆசிரியை உடனடியாக பொலிஸாரிடம் முறையிட்டு அவர்களிடம் இதுகுறித்து உதவி கோரியுள்ளார். இதன்படி குறித்த இளைஞர் தொடர்பான விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்துவருவதாக கூறப்பட்டுள்ளது.