தீபிகாவை சிதைத்த அரசியல்வாதிகள்.!

சஞ்சய் லீயா பன்சாலி இயக்கத்தில் தீபிகா படுகோனே, ஷாகித் கபூர், ரன்வீர் சிங், அதிதி ராவ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பத்மாவதி’.

201710121154599685_1_DeepikaPadukone._L_styvpfபெரும் பொருட்செலவில் மிகப்பிரமாண்டமாக இந்த படம் உருவாகி உள்ளது.

ராஜஸ்தான் ராஜ்புத் வம்சத்து அரசியான ராணி பத்மினியின் கதை தான் “பத்மாவதி” என்று கூறப்படுகிறது.

இந்த படத்தில் ராணி பத்மினியாக தீபிகா படுகோனே நடித்துள்ளார்

இந்தப்படத்தை பற்றிய அறிவிப்பு வெளியான நாள் முதலே பிரச்சனைகள் ஆரம்பித்தது.

ஸ்ரீ ராஜ்புத் கர்ன சேனை என்ற அமைப்பு தொடர்ந்து பத்மாவதி படத்திற்கு எதிராக போராட்டம் செய்து வருகிறது.

பலமுறை பத்மாவதி ஷூட்டிங் நடைபெற்ற இடங்களில் தாக்குதலும் இந்த அமைப்பு நடத்தியிருக்கிறது.

இந்த நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ‘பத்மாவதி’ படத்தின் போஸ்டரில் உள்ள தீபிகா படுகோனே படத்தை, குஜராத்தின் சூரத் நகரில் ரங்கோலி ஓவியமாக கரண் கே என்ற ஓவியர் வரைந்திருந்தார்.

சுமார் 48 மணி நேரம் கஷ்டப்பட்டு, தீபிகா படுகோனே ஓவியத்தை மிகவும் தத்ரூபமாக ஓவியர் உருவாக்கியிருந்தார்.

திடீரென்று, அங்கு வந்த ராஜ்புத் கர்ன சேனை அமைப்பினர் ஓவியத்தை சிதைத்து, பத்மாவதி படத்திற்கு எதிராக கோஷமிட்டனர்.

இதனால், அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

நவம்பர் மாதம் வெளியாக இருந்த பத்மாவதி படத்தை, போராட்டங்கள் காரணமாக டிசம்பர் மாதத்திற்கு படக்குழுவினர் தள்ளிவைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.