பாலியல் குற்றம் சமத்தப்பட்டுள்ள பொலிஸ் பரிசோதகர் பதவி நீக்கம்!

பாலியல் குற்றச்சாட்டு சமத்தப்பட்டுள்ள ரத்தொட்டை பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் கபில திசாநாயக்க பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
srilanka1015_reportcovermain_0பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவினால் நேற்றைய தினம் முதல் அமுலாகும் வகையில் அவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் கூறியுள்ளது.

பொலிஸ் பரிசோதகர் கபில திசாநாயக்க உடுதும்புர பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியாக பணியாற்றிய காலத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 09 அல்லது அதனை அண்மித்த திகதி ஒன்றில் பெண் கிராம சேவக அதிகாரி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேற்கொள்ளப்படுகின்ற விசாரணைகளுக்கு அமைவாகவே அவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் கூறியுள்ளது.

சந்தேகநபரான பொலிஸ் பரிசோதகர் கபில திசாநாயக்க கடந்த 11ம் திகதி கைது செய்யப்பட்டு தெல்தெனிய நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டதையடுத்து பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.