போர் பதற்றங்களையும் மீறி உச்சம் தொட்ட இந்தியப் பங்குச்சந்தை!

இந்தியப் பங்குச்சந்தை மட்டுமல்லாது உலகளவிலும் பங்குச்சந்தை வர்த்தகம் இன்று உச்சத்திலேயே உள்ளது.

imm_12193_13158_12243உலகச் சந்தைகளில் நிலவிவரும் நிச்சயமற்ற தன்மை, சர்வதேச அரசியல் சூழல், அமெரிக்கா-வடகொரியா இடையே நிலவிவரும் போர் பதற்றம், சந்தை நிலவரத்தின் முக்கியக் காரணியான கச்சா எண்ணெய் விலையேற்றம், இவையனைத்தையும் கடந்து, இன்றைய இந்தியப் பங்குச்சந்தை உச்சத்தில் தொடங்கியுள்ளது. தற்போதைய வர்த்தக நிலவரப்படி, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ், 84.03 புள்ளிகள் உயர்ந்து 31,353 புள்ளிகளாக உள்ளது. அதே வேளையில், தேசியப் பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 36 புள்ளிகள் உயர்ந்து, 9,790 புள்ளிகளாக உள்ளது.

இந்தியப் பங்குச்சந்தை, தொடர்ந்து 32,000 புள்ளிகள் அருகிலேயே நிலைத்திருப்பது வணிகர்களை மகிழ்ச்சியிலேயே வைத்துள்ளது. அமெரிக்கா- வடகொரியா இடையே நிலவிவரும் போர் பதற்றம், இந்தியா- சீனா எல்லையில் நீடிக்கும் பதற்றம் என இவை அனைத்தையும் கடந்து, இந்தியப் பங்குச்சந்தை உச்சத்திலேயே உள்ளது. இன்றைய நிலவரப்படி லுப்பின், இன்ஃபோசிஸ் போன்ற நிறுவனங்களின் பங்குகள் உச்சத்தில் உள்ளன.