தென்னிலங்கையில் பரபரப்பு! மனிதச் சடலத்துடன் முதலையின் சடலமும் மீட்பு!

இலங்கையின் தெற்கே அம்பாந்தோட்டை மாவட்டம் லுனுகம்வெஹேர நீர் தேக்கத்தில், மனிதச் சடலம் ஒன்றுடன் 7 அடி நீளமான முதலையின் சடலம் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.

59e83eb9adc66-IBCTAMILகுறித்த நீர் தேக்கத்தில் இருந்து மனிதச் சடலம் ஒன்றை மீட்கும் போது வலையில் சிக்கிய நிலையிலேயே குறித்த 7 அடி முதலையின் சடலமும் கிடைத்துள்ளது.

இதுகுறித்து மேலும் தெரியவருவதாவது,

கடந்த 15ஆம் திகதி குறித்த நீர்த்தேக்கத்தில் மதிய வேளையில் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது 39 வயதுடைய நபர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார். குறித்த நபரின் சடலம் தேடப்பட்டபோதும் கிடைக்காத நிலையில்  பிரதேச மக்களும் கடற்படையினரும் இணைந்து சடலத்தை கண்டுபிடிப்பதற்காக வலை ஒன்றை விரித்திருந்தனர்.

இவ்வாறு விரிக்கப்பட்டிருந்த வலையிலேயே குறித்த நபரின் சடலத்துடன் முதலையின் சடலமும் சிக்கியுள்ளது.