வித்யாசாகர் ராவின் ஓராண்டு பணி குறித்து வெளியிடப்பட்டுள்ள புத்தகத்தில் ஜெயலலிதாவின் கடித நகல் இடம்பெற்றுள்ளது.
முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 22 ஆம் தேதி இரவு அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவரது உடல்நிலை குறித்து அப்போது பொறுப்பு ஆளுநாராக இருந்த வித்யாசாகர் ராவ் விசாரித்து அறிந்தார்.
இதற்கு நன்றி தெரிவித்து ஜெயலலிதாவின் கையெழுத்துடன் 23 ஆம் தேதியிட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில் வித்பெஸ்ட் விஷ்ஸஸ் என்று ஜெயலலிதா கைப்பட எழுதப்பட்டுள்ளது.
இது ஜெயலலிதாவின் கையெழுத்து தானா உண்மை எனில் கடிதம் எழுதும் நிலையில் இருந்த ஜெயலலிதா கைநாட்டு வைக்கும் நிலைக்கு போனது ஏன் என பல்வேறு கேள்விகள் இதனால் தற்போது எழுப்பப்பட்டு வருகின்றது.
இதில் எந்த சந்தேகமும் வேண்டாம், வழக்கம்போல வெறும் லெட்டர் பேடில் கையெழுத்து வாங்கி முன்கூட்டியே வைத்திருந்ததில் இதுவும் ஒன்று எனவும்,
வியாபம் மருத்துவ கல்லூரி ஊழலில் எத்தனை பேரை கொன்றார்களோ? அதே போல ஜெயலலிதாவுக்காக உண்மை சொல்ல, யாராவது வாய் திறந்தால், அவ்வளவு பேரையும் கொல்லும், இந்த கொள்ளைக்கார கொலைகார கூட்டம் எனவும்,
வழக்கமாக ஜெயலலிதா தமிழில் தான் கையெழுத்து போடுவார். இது ஆங்கிலத்தில் இருக்கிறது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று என பல தரப்பில் இருந்து சந்தேக அலைகள் கிளம்பி இருக்கிறது.
இந்த கையெழுத்து மற்றும் கடிதம் உண்மையானதா என ஆராயவேண்டும் என்று அனைத்து தரப்பில் இருந்தும் வலுவான வாதம் முன்வைக்கப்படுகிறது.
ஏற்கனவே உள்ள சந்தேகங்களுக்கே விடை கிடைக்காத நிலையில் இந்த கடிதம் மேலும் சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகின்றது.