மஹிந்தவை கைவிட்டு மைத்திரியுடன் கைகோர்க்கும் கருணா!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து செயற்பட முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான் ) தயாராகி வருவதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

karuna_12231அதேவேளை மேல் மாகாண சபையின் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் ஜனாதிபதி சட்டதரணி ஸ்ரீநாத் பெரேராவும் ஜனாதிபதியுடன் இணைந்து செயற்பட திட்டமிட்டுள்ளார்.

ஜனாதிபதி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில், கருணா மற்றும் ஸ்ரீநாத் ஆகிய இருவரும் இணைந்து செயற்படவுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இணைவு தொடர்பில் ஐக்கிய மக்கள் சுநத்திர முன்னணியின் பொது செயலாளர் மஹிந்த அமரவீரவை, குறித்த இருவரும் சந்தித்து பேசியுள்ளனர்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உப தலைவராக செயற்பட்ட கருணா, பின்னர் தமிழ் ஐக்கிய விடுதலை முன்னணியுடன் இணைந்து அரசியல் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

கடந்த ஆட்சியின் போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தீவிர விசுவாசியாக செயற்பட்ட கருணா, தற்போது சமகால ஜனாதிபதியுடன் இணைந்து செயற்படவுள்ளதாக குறித்த ஊடகம் மேலும், சுட்டிக்காட்டியுள்ளது.