ஆக்ராவில் உள்ள தாஜ்மஹால் முன்னர் சிவன் கோவிலாக இருந்தது என்று, நேரில் பார்த்தவர் போல பாஜக-வின் மூத்தத் தலைவரும், எம்.பி.யுமான வினய் கத்தியார் பேசியுள்ளார்.
ஆக்ராவில் இருப்பது தேஜோ மஹால், அதாவது சிவன் கோவில்; இந்து மன்னர்களால் கட்டப்பட்டதுதான் தாஜ்மஹால் கோவிலின் கட்டமைப்பை பார்த்தாலே அது சிவன் கோவிலாக இருந்தது தெரியவரும்;
சிவன் கோவிலில்தான் மேலிருந்து கீழே நீர் சொட்டும் வகையில் கட்டப்பட்டிருக்கும்; தாஜ்மஹாலில் இந்த அமைப்பும் இருக்கிறது என்றும் தனது ‘ஆராய்ச்சி’ முடிவுகளை வினய் கத்தியார் வெளியிட்டுள்ளார்.
எனினும் தாஜ்மஹாலை இடிக்க வேண்டிய அவசியம் இல்லை.. மக்கள் விரும்பும் தாஜ்மஹாலை நாம் பாதுகாக்க வேண்டும் என்றும் அவர் கருணை காட்டியுள்ளார்.
அயோத்தியில் பாபர் மசூதியை இடித்துதரைமட்டமாக்கிய வழக்கில் வினய் கத்தியாரும் குற்றம்சாட்டப்பட்டவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
ஆதாரம் வெளியிடுவேன் , சுப்பிரமணியசாமி கொக்கரிப்பு..??
தாஜ்மஹால் முன்பு கோவிலாக இருந்தது தொடர்பாக தன்னிடம் ஆதாரங்கள் உள்ளதாகவும் அவற்றை விரைவில் வெளியிடப் போவதாகவும், மற்றொரு பாஜக தலைவருமான சுப்பிரமணியசாமியும் படம் காட்டியுள்ளார்.
தாஜ்மஹால் தொடர்பாக எனக்கு கூடுதல் ஆவணங்கள் கிடைத்துள்ளன; ஜெய்ப்பூர் ராஜாக்களை மிரட்டியே தாஜ்மஹால் இருக்கும் நிலத்தை ஷாஜஹான் பறித்திருக்கிறார்;
இதற்கு ஈடாக 40 கிராமங்கள், ஜெய்ப்பூர் ராஜாக்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளன; ஆனால் இது தாஜ்மஹால் நிலத்துக்கு இணையான மதிப்பு அல்ல;
மேலும் தாஜ்மஹால் நிலத்தில் ஒரு கோவில் இருந்திருக்கிறது; இந்த கோவிலை இடித்துவிட்டுத்தான் தாஜ்மஹால் கட்டினார்களா எனத் தெரியவில்லை;
இதுதொடர்பான ஆவணங்களை விரைவில் வெளியிடப் போகிறேன் என்று சுப்பிரமணியசாமி தெரிவித்துள்ளார்.