சினிமாவின் ஸ்டார் நடிகையான சமந்தா நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். மிகவும் சிறப்பாக கோவாவில் இவர்கள் இருவருக்கும் திருமணம் இரு மதமுறைப்படி நடைபெற்றது.
இதனை தொடர்ந்து அவர்கள் அமெரிக்காவுக்கு ஹனிமூனுக்கு செல்வார்கள் என எதிர்பார்க்கபட்ட நேரத்தில் அவர்கள் திருமணம் முடிந்த ஒரு வாரத்திலேயே படங்களில் நடிக்கும் வேலையை தொடங்கிவிட்டார்.
மகாநதி படத்தில் தற்போது இணைந்துள்ள சமந்தா முன்பு நான் அதிர்ஷ்டமானவள், எனக்கு நல்ல நண்பர் கிடைத்துள்ளார், அவருக்கு சமைக்க தெரியும், பின் நான் ஏன் அதை கற்றுக்கொள்ள வேண்டும் என கூறியிருந்தார்.
தற்போது இவ்விசயத்தில் அவரின் மனநிலை மாறியுள்ளது. அவர் தன் கணவருக்காக சமைக்க கற்றுக்கொள்ள முடிவெடுத்துள்ளாராம்.