நாகப்பட்டினம், பொறையார் அரசு போக்குவரத்துக்கழகப் பணிமனையின் மேற்கூரை இடிந்துவிழுந்து 8 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவம், பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாகப்பட்டினம், பொறையார் பகுதியிலுள்ளது அரசு போக்குவரத்துக்கழகப் பணிமனையில் உள்ள ஓய்வறையில், நேற்றிரவு பணியை முடித்துவிட்டு ஓய்வெடுப்பதற்காக ஊழியர்கள் படுத்திருந்தனர். இன்று அதிகாலையில், எதிர்பாராதவிதமாக திடீரென்று கட்டடத்தின் மேற்கூரை இடிந்துவிழுந்தது. இந்த விபத்தில் 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தீயணைப்புத் துறையினர் விரைந்துவந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். கடந்த ஒரு மாதத்துக்கு முன்னர், கோயம்புத்தூரில் பேருந்துநிலையம் இடிந்துவிழுந்து 5 பேர் உயிரிழந்தனர். தற்போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. காயமடைந்த மூன்று பேர், காரைக்கால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.