அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் மனைவியும், அமெரிக்காவின் முதல் பெண்மணியுமான மெலனியா ட்ரம்ப், தன்னைப் போன்ற மற்றொரு பெண்ணை பொது நிகழ்வுகளுக்கு ட்ரம்ப்புடன் அனுப்பி வைக்கிறார் என்ற குற்றச்சாட்டு இணையத்தைக் கலக்கி வருகிறது.
கடந்த வெள்ளிக்கிழமை, புயலால் பாதிக்கப்பட்ட புவர்ட்டோரிக்கோவுக்கு நிதி வழங்குவது பற்றிய திறந்தவெளிச் சந்திப்பொன்றில் ட்ரம்ப் கலந்துகொண்டார்.
அவருடன் சமுகமளித்திருந்த மெலனியா ட்ரம்ப்பின் புகைப்படத்தை அடிப்படையாக வைத்தே, மெலனியா, தன்னைப் போன்றதொரு நகலை அவ்வப்போது பயன்படுத்தி வருவதாகச் சந்தேகம் எழுந்துள்ளது.
மெலனியாவின் நகல் என்று அறியப்படுபவர், பெரிய குளிர் கண்ணாடியை அணிந்திருப்பதுடன், அவரது மூக்கு, மெலனியாவின் மூக்குக்கு இணையான பொய் மூக்கு ஒன்றையும் அணிந்திருப்பதாகத் தகவல்கள் கிளம்பியுள்ளன.
மேலும், குறித்த பத்திரிகையாளர் சந்திப்பில், “எனது மனைவி மெலனியா இங்குதான் நிற்கிறார்” என்று ட்ரம்ப் குறிப்பிட்டது பற்றியும் சர்ச்சைகள் எழுந்துள்ளன.
அதாவது, சந்திப்பில் கலந்துகொண்ட அனைவருக்கும் தெரியும் வகையில் மெலனியா நின்றிருக்க, ட்ரம்ப் அவ்வாறு கூறியது, ‘இது மெலனியாதான்’ என்பதை அழுத்திக் கூறுவதற்காகவா என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.