பாலியல் தொல்லைக்கு ஆளான ராதிகா சரத்குமார்!

தான் பாலியல் தொல்லைக்கு ஆளானதாக நடிகை ராதிகா சரத்குமார் தெரிவித்துள்ளார். இவ்வாறு இந்திய இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது

ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீன் தங்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததை நடிகைகள் தற்போது வெளியே சொல்லத் தொடங்கியுள்ளனர்.

1491979648-6476இதைப் பார்த்த பிறகு பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லை குறித்து சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகிறார்கள்.

அதற்கு Me too என்ற டேக்கை பயன்படுத்துகிறார்கள்.

Capturewyeeeeeeeeeeதானும் பாலியல் தொல்லைக்கு ஆளானதாகக் கூறி Me too என்று ட்விட்டரில் தெரிவித்துள்ளார் நடிகை ராதிகா சரத்குமார்.

நீங்கள் ஒரு பிலிம் ஸ்டார், உங்களுக்கு யார் பாலியல் தொல்லை கொடுப்பது என்று ஒருவர் ராதிகாவிடம் கேட்டுள்ளார்.

என்னது உங்களுக்கு பாலியல் தொல்லையா. அதிர்ச்சியாக உள்ளது என்று ரசிகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

தற்போது உங்களுக்கு பவர் உள்ளது. அவர்களின் பெயரை தெரிவித்து அசிங்கப்படுத்த வேண்டும். நீங்கள் அமைதியாக இருப்பதால் அவர்கள் தனது செயலை தொடரக்கூடும் என்று ஒருவர் கமெண்ட் போட்டுள்ளார்.