மோடி என்ன செய்யப் போகிறாரோ..? தமிழக பாஜக தலைவர்களுக்கு திடீர் படபடப்பு!!

தமிழக பாஜக பெரும்புள்ளிகளை கலங்கடிக்கும் வகையில் ஒரு சம்பவம் மீண்டும் தமிழகத்தில் அரங்கேறி இருக்கிறது.

கடந்த சில மதங்களுக்கு முன்பே அமித் ஷா தமிழகத்தில் பாஜக அச்சாரம் போடும் முயற்சி எதிர்பார்த்த அளவிற்கு ஈடேறவில்லை என்று கூறினார்.

5975f2b79b15c-IBCTAMILமேலும் தமிழக பாஜக தலைவர்களின் செயல்பாடு குறித்து அதிருப்தி தெரிவித்தார். இந்த நிலையில் பாஜக திட்டங்களை எதிர்க்கும் வண்ணம் திரைப்படம் வந்துள்ளதால் மீண்டும் கட்சிக்குள் விமர்சனங்களுக்கு உள்ளாகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

அட்லி இயக்கத்தில் நடிகர் விஜய் மூன்று வேடங்களில் நடித்துள்ள மெர்சல் திரைப்படம் தீபாவளிக்கு திரைக்கு வந்துள்ளது.

நடிகர் விஜய் தன்னுடைய படங்களில் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், தீண்டாமைக்கு எதிராகவும் சில வசனங்களை, காட்சிகளை வைப்பதை வழக்கமாக வைத்துள்ளார். குறிப்பாக, கத்தி திரைப்படம் விவசாயிகள் பிரச்சனையை வலுவாக பேசியது.

மெர்சல் திரைப்படத்தில் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசுக்கு எதிராக வலுவான வசனங்கள் உள்ளன.

வடிவேலிடம் திருடர்கள் கொள்ளையடிக்க வர, அவர், கிழிந்த பர்சை காண்பித்து இந்தியாவில் யாரிடமும் தற்போது பணம் இல்லை.

எல்லோருமே கியூவில்தான் நிற்கிறார்கள் என்று பணமதிப்பு நீக்கத்தை சாடும் காட்சி இடம்பெற்றுள்ளது.

சிறிய நாடான சிங்கப்பூர் குறைவாக வரி வசூல் செய்து மக்களுக்கு நிறைய செய்கிறது. ஆனால், இந்தியாவில் ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்படுகிறது.

ஆனால், மக்களுக்கு என்ன கிடைக்கிறது என்கிற பாணியில் வசனம் உள்ளது.இலவசமாக மிக்சி, கிரைண்டர் எல்லாம் கொடுக்கும் போது, மருத்துவத்தை இலவசமாக கொடுக்க முடியாத என்ற வசனத்தையும் விஜய் பேசியுள்ளார்.

இந்த வசனங்களுக்கு தியேட்டரில் கைத்தட்டல் அதிருகிறது. ஆனால், பாஜக தலைவர் தமிழிசை பதற்றமடைந்துள்ளார். ஜிஎஸ்டி, பணமதிப்பு நீக்கம் போன்ற காட்சிகளை நீக்க வேண்டுமென சூப்பர் தணிக்கை அதிகாரியாக மாறி உத்தரவிட்டுள்ளார்.

ஆர்எஸ்எஸ்.- பாஜகவினர் பலரும் சமூக வலைதளங்களில் விஜய்க்கு எதிராக விஷம் கக்கி வருகின்றனர்.

இதற்கு பாஜக தரப்பில் இருந்து வீசப்படும் விமர்சனங்களுக்கு, விஜய் ரசிகர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்பதுதான் இப்போதைய கேள்வி?

அடுத்து பாஜக மேலிடத்தில் இருந்து கேட்கப்படும் கேள்விகளை தமிழிசை எப்படி எதிர்கொள்ள போகிறார் என்பது அடுத்த கேள்வி உள்ளது.

இதன் ஒரு பகுதியாகவே அந்த காட்சிகளை நீக்க வேண்டும் என்று கொதித்தெழுந்து இருக்கிறார்.