தென்னிலங்கை வானிலிருந்து கடலில் பாரிய சத்தத்துடனும் வெளிச்சத்துடன் விழுந்து மக்களை அச்சுறுத்திய மர்மப் பொருள் தொடர்பாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
இது சீனாவின் மியென்கொன் விண்வெளி நிலையமாகத்தான் இருக்கமுடியும் என்ற சந்தேகமே தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது.
ஏனெனில் குறித்த விண்வெளி நிலையம் 2017ஆம் ஆண்டு ஒக்டோபர் மற்றும் 2018ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கு இடைப்பட்ட காலப்பகுதியில் பூமியில் உடைந்து விழும் என சீன விண்வெளி அமைப்பின் அதிகாரிகளால் ஏற்கனவே அறிவிப்பு விடுக்கப்பட்டிருந்தது.
குறித்த விண்வெளி நிலையம் தமது கட்டுப்பாட்டை இழந்துள்ளமையே இதற்கான காரணம் என அவர்கள் தெரிவித்த்திருந்தனர். அத்துடன் 8 தொன் நிறையுடைய குறித்த விண்வெளி நிலையம் பூமிக்கு அண்மிக்கும்போது போது அது 100 கிலோ துண்டுகளாக பிரியும் எனவும் அவர்கள் குறிப்பிட்டிருந்ததோடு அது உடைந்து விழும் இடம் தொடர்பில் தெளிவில்லை எனவும் சந்தேகம் தெரிவித்திருந்தனர்.
இதேவேளை தென்னிலங்கைக் கடலில் உடைந்து விழுந்த மர்மப் பொருள் சீனாவின் விண்வெளி நிலையம் தான், என சீனா இன்னமும் உறுதி செய்யவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். இந்த நிலையிலேயே அது விண்கல்லாக இருக்கலாம் என பல்வேறுபட்ட தரப்பினரும் தமது கருத்துக்களினைக் கூறிவருகின்றனர்.