சற்றுமுன்னர் சூரிச் வந்தடைந்த புதுக்குடியிருப்பு கரனின் குடும்பத்தினர்!

சுவிஸில் பொலிஸாரினால் சுட்டுக் கொல்லப்பட்ட, புதுக்குடியிருப்பு கரனின் குடும்பத்தினர், சற்றுமுன்னர் சூரிச் வந்தடைந்தனர்… 

சுவிற்சலாந்தில் வன்முறையில் ஈடுபட முயன்ற குற்றச்சாட்டில், சுவிஸ் பொலிஸாரினால் சுட்டுக் கொல்லபட்ட முல்லைத்தீவு புதுக்குடியிருப்பை சேர்ந்த சுப்ரமணியம் கரன் என்பவரின் இறுதிக்கிரியைகள் மற்றும் விசாரணைகள் தொடர்பில் ஆராயும் நோக்கில், அவரது குடும்ப அங்கத்தவர்கள் நேற்றுமாலை கட்டுநாயக்கா விமானநிலையத்திலிருந்து சுவிஸ் தூதரக அதிகாரிகளுடன் இணைந்து சுவிற்சலாந்துக்கு பயணமாகி சற்றுமுன்னர் சூரிச் விமான நிலையத்தை வந்தடைந்தனர். இவர்களை தமிழ்மக்கள் சிலர் வரவேற்று ஆறுதல்படுத்தி உள்ளனர்.

இன்றையதினம் சுவிற்சலாந்தின் LUGANO,TICINO பகுதியில் சுட்டு கொல்லபட்ட கரனின் இறுதிகிரியைகள் நடைபெறவுள்ள நிலையில் இவர்கள் அதில் பங்கு கொள்ளும் நோக்கில் விமான நிலையத்தில் இருந்து லுகானோ நோக்கி பயணமாகி உள்ளார்கள் எனவும், சுவிஸ் நாட்டு “எமது ” நிருபர் அவர்கள் எமக்கு அறிய தந்துள்ளார்.

(இறுதிக் கிரியை சம்பந்தமான படங்கள் உட்பட மேலதிக செய்திகள் “எமது  இணயத்தளத்தில் ” தொடரும்..)

Capturedtjherj Capturesrhhhhhhhh