வடகொரியா மீது தாக்குதல் நடத்தத் தயாராக இருக்குமாறு அமெரிக்க யுத்தக் கப்பல் ஒன்றுக்கு கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஜப்பானின் கடற்பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் ஏவுகணை எதிர்ப்பு கப்பல் ஒன்றுக்கே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.
‘தோமாஹோக்’ ரக ஏவுகணையை வடகொரியா மீது ஏவத் தயார் நிலையில் இருக்குமாறு பெயர் குறிப்பிடப்படாத அக்கப்பலுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அணுவாயுதப் போர் விளிம்பு நிலையில் இருக்கும் நிலையில், இந்த உத்தரவால் வடகொரியாவுக்கும் அமெரிக்காவுக்குமான போர் எந்தக் கணத்திலும் ஆரம்பமாகும் சூழல் தோன்றியுள்ளது.