ஸ்ரீலங்காவின் தலைநகர் கொழும்பு வெள்ளவத்தைப் பகுதியில் சற்று முன்னர் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வெள்ளவத்தை பிரான்சஸ் வீதியில் உள்ள வீடொன்றிலேயே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதென அறியமுடிகிறது.
கொழுந்து விட்டெரிந்த தீயினை அணைப்பதற்காக தீயணைப்பு படையினர் தற்போது குறித்த இடத்திற்கு விரைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த தீ எதனால் ஏற்பட்டது என்பது தொடர்பான விபரங்களும் அதனால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்தும் தெரிவிக்கப்படவில்லை. இந்த நிலையில் இது தொடர்பான விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.