பாலிவுட் இயக்குனர் ஆனந்த் எல் ராய் இயக்கும் பெயரிடப்படாத படத்தில் நடிகர் ஷாரூக்கான் நடித்து வருகிறார்.
இதில் ஷாரூக்கான் உயரம் குறைந்து காணப்படும் மனிதராக நடிக்க உள்ளார்.
இப்படத்தில் நடிகை தீபிகா படுகோனேவும் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில், அவர் நடிப்பது உறுதியாகியிருக்கிறது. படத்தில் அவர் ஹீரோயினாக நடிக்கவில்லை, சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருக்கிறார்.
இதைப்பற்றி தீபிகா படுகோனே கூறியதாவது: நடிகர் ஷாரூக்கான் படத்தில் நான் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறேன்.
இதில் நடிக்க வேண்டும் என்று ஷாரூக்கான் கேட்டு கொண்டார். அவரின் வேண்டுகோளுக்காகவும், எங்களின் நட்பிற்காகவும் நடிக்க சம்மதம் சொன்னேன்.
இரண்டு நாட்கள் ஷூட்டிங் நடந்தது. இரண்டு நாட்களும் கலகலப்பாக சென்றது என்று கூறினார் தீபிகா.