9வயது சிறுமி மீது 150 கிலோ பெண்மணி அமர்ந்து அழுத்திக் கொலை!!

• குழந்தைகள்-சேட்டை-செய்தால்-அவர்களுக்கு-மரணத்தைப்-பரிசளிப்பதா- என்ன-ஒரு-அரக்கத்தனம்?!

அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தைச் சேர்ந்த 69 வயது க்ரே ஸ்மித் எனும் பெண்மணி தன் 9 வயது மகள் டெரிகா லிண்ட்சே சேட்டை செய்கிறார் என்ற கோபத்தில் தனது உறவினரான 64 வயது வெரோனிகா போஸ்ஸி எனும் பெண்மணியைக் கொண்டு புது விதமாக மிரட்டி இருக்கிறார்.

எப்படி தெரியுமா?

9 வயதுச் சிறுமியின் மடியில் 64 வயது வெரோனிகாவை உட்காரச் சொல்லி இருக்கிறார். வெரோனிகாவின் எடை அதிகமில்லை… வெறும் 150 கிலோ தான்!!!

பச்சை மண்ணான 9 வயதுச் சிறுமி இந்த  எடையைத் தாங்குவாளா? இல்லையா? என்ற குறைந்த பட்ச ஞானம் கூட இல்லாத அம்மாவான க்ரே ஸ்மித் இப்போது மகளை இழந்து அழுது கொண்டிருக்கிறார்.

4568DDA400000578-0-image-a-27_1508218029049  9வயது சிறுமி  மீது  150 கிலோ பெண்மணி  அமர்ந்து  அழுத்திக்  கொலை!! :  என்ன ஒரு அரக்கத்தனம்?! 4568DDA400000578 0 image a 27 1508218029049

Veronica Green Posey, 64,

ஆம்… 145 கிலோ அதிக எடை கொண்ட வெரோனிகா 9 வயதுச் சிறுமி டெரிகாவின் மடியில் அமர்ந்ததில் முதலில் சிறுமிக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டிருக்கிறது.

அதைத் தொடர்ந்து எடையை மீறி சிறுமியால் எழுந்து விடுபட முடியாத காரணத்தால் பயத்தில் மாரடைப்பு ஏற்பட்டு சிறுமி இறந்து விட்டார்.

உறவினரான க்ரே சொல்கிறார் என்பதற்காக ஒரு பச்சிளம் சிறுமியை பயமுறுத்திய வெரோனிகா, இப்போது கொலைக் குற்றத்திற்காக கைது செய்யப்பட்டிருக்கிறார்.

‘அம்மா என்றாலே அன்பு என்று தான் அர்த்தம்’. ஆனால் க்ரே ஸ்மித் மாதிரியான அம்மாக்கள் பேசாமல் குழந்தையே பெற்றுக் கொள்ளாமல் தவிர்த்து விடலாம்.

குழந்தைகள் என்றால் சேட்டை தானே அவர்களது டிரேட் மார்க். அதற்காக இப்படி நூதன தண்டனை எல்லாம் கொடுத்து அவர்களது மரணத்திற்கே காரணமாகி விடும் அம்மாக்களை என்ன சொல்வது?!

இதில் கொலைக்குற்றம் சாட்டப்பட வேண்டியது வெரோனிகாவின் மீது மட்டுமல்ல, எய்தவர்கள் இருக்க அம்பை மட்டும் நோவானேன்?! சிறுமியின் தாய் க்ரே ஸ்மித்தும் இவ்விஷயத்தில் கொலைக்குற்றவாளி தான்.

இன்றைய தாய்மார்களுக்கு குழந்தைப் பேறு அடைந்ததும், அவர்களுக்கு முதலில் தர வேண்டியது குழந்தையை எப்படிக் கையாள்வது, எத்தனை போஷாக்காக  வளர்ப்பது என்பது குறித்த பயிற்சிகள் அல்ல, பெறப்போகும் குழந்தைகள்  என்ன விதமான  சேட்டைகள் எல்லாம் செய்யக்கூடும்? அவற்றை எப்படியெல்லாம் பொறுமையுடன் சமாளிக்க வேண்டும் என்ற பயிற்சிகளைத் தான்.

அமெரிக்காவைப் பொருத்தவரை கடந்த வாரத்தில் நிகழ்ந்த சிறுமிகளுக்கு எதிரான வன்முறையில் இது இரண்டாவது சம்பவம்;

adptive  9வயது சிறுமி  மீது  150 கிலோ பெண்மணி  அமர்ந்து  அழுத்திக்  கொலை!! :  என்ன ஒரு அரக்கத்தனம்?! adptive

3 years old Sherin Mathews

முதல் சம்பவம், 

கேரளாவைச் சேர்ந்த மென்பொறியாளர் ஒருவர், தான் தத்தெடுத்த மூன்று வயதுச் சிறுமி ஒருத்தி, சரியாகச் சாப்பிட மாட்டேன் என்கிறாள், பால் அருந்த மறுக்கிறாள் என்ற காரணத்துக்காக அவளை தனது வீட்டின் வெளியில் உள்ள தோட்டப்பகுதியில் மரத்தினடியில் தனியாக நிற்க வைத்து தண்டனை அளித்து விட்டு வீட்டுக்குள் சென்று விட்டிருக்கிறார்.

சில நிமிடங்களில் திரும்பி வந்து பார்த்தால், குழந்தையைக் காணோம். இன்று வரையிலும் அந்தச் சிறுமி கிடைத்தபாடில்லை.

மூன்றே வயது நிரம்பிய சிறுமியை, யாராவது  அப்படி இரவு நேரத்தில் வீட்டின் வெளியில் தனியாக நிற்க வைத்து விட்டுச் செல்வார்களா? அமெரிக்காவின் வீட்டுத் தோட்டங்களைப் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை.

அங்கெல்லாம் வீட்டின் பின்புறத் தோட்டங்கள் எனில் அவை மினி காடுகள் போல அளவில் பிரமாண்டமானவை என்று பலர் சொல்லக் கேள்வி!

இரவுகளில் கரடிகள் நடமாட்டம் கூட இருப்பதுண்டு என அரசு எச்சரிக்கை எல்லாம் செய்யும் என்று கூட உறவினர்கள் சிலர் சொல்லக் கேள்விப்பட்டிருப்போம்.

அப்படியான சூழலில் அதிலும் தத்துச் சிறுமியை மிரட்ட வேண்டிய அவசியமென்ன?

அந்தச் சிறுமி ஒரு மாற்றுத்திறனாளி என்று வேறு சொல்லப்படுகிறது.

இப்படி சின்னஞ்சிறு விஷயங்களுக்காகவெல்லாம் அறியாக் குழந்தைகள் சிரமத்துக்கு உள்ளாக்கப்படும் போது அந்தச் செய்திகள் வாசகர்களை மிகுந்த கொதிப்புக்கு உள்ளாக்குகின்றன.

“குழந்தைகளுக்கு என்று இயற்கையாக உள்ள இயல்புகளோடு அவர்களை வாழ அனுமதிப்பதே கூடாது என்றாகி விட்டது இன்று!”

இப்படியான செய்திகளைக் காணும் போதெல்லாம்,

‘இன்றைய பெற்றோர்கள், தங்களால் ஒரு குழந்தையை பொறுமையும், சகிப்புத் தன்மையும் கொண்டு வளர்க்க முடிந்தால் மட்டுமே குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டுமே தவிர; டைம் பாஸுக்கு குழந்தை பெறத் தேவையே இல்லை, அத்தகைய பெற்றோர் கடுமையாகத் தண்டிக்கப்படுவர்’

– என அரசாங்கங்கள் சட்டம் இயற்றினாலும் தேவலாம் என்று தான் சொல்லத் தோன்றுகிறது.

veronika