யாழ் கோப்பாயில் சாராயம் குடித்த குடும்பத்தலைவர் மரணம்!!

நீண்ட நேரம் மயக்க நிலையில் இருந்தவர் உயிரிழந்துள்ளார். உறவினர்களால் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட போதும் உயிரிழந்து விட்டார் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

மது அருந்திய நிலையில் அவருக்கு ஏற்பட்ட வாந்தியால் இரப்பைக்குள் இருந்த உணவுப் பதார்த்தம் சுவாசப்பைக்குள் சென்ற நிலையிலேயே இறப்பு நிகழ்ந்துள்ளது என சட்டமருத்துவ அதிகாரி மயூரன் தெரிவித்தார்.

கோப்பாய் தெற்கைச் சேர்ந்த நடராஜா மனோராஜ் (வயது–52) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு நேற்றுமுன்தினம் உயிரிழந்தார்.

குடும்பத் தகராறு காரணமாக மனைவியை விட்டுப் பிரிந்த மனோராஜ் தனது தாயுடன் வாழ்ந்து வந்தார். தீபாவளி தினத்துக்கு முதல் நாளும் மறுநாளும் அதிக மது அருந்தியுள்ளார்.

மது அருந்திய அவர் தனது தாயுடன் தீபாவளியன்று கடற்கரைக்குச் சுற்றுலா சென்றுள்ளார். அவருடன் சென்றவர்கள் கடலுக்குச் சென்ற போதிலும் அவர் வாகனத்திலேயே இருந்துள்ளார்.

alcoholவானில் மயக்க நிலையில் இருந்த அவரை பல முறை எழுப்பிய போதிலும் அவர் எழும்பவில்லை. இதனால் அவரை வீட்டுக்கு அழைத்துச் சென்ற தாயும் உறவினர்களும் வீட்டில் வைத்து அவரை எழுப்பினர் எனினும் அவர் எழும்பவில்லை.

இதனால் அவர் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார் என தெரிவிக்கப்பட்டது. கோப்பாய் பிரதேச வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட மனோராஜ் வைத்தியசாலைக்குக் கொண்டுவர முன்னரே இறந்து விட்டார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இவரது இறப்பு விசாரணையை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிறேமகுமார் மேற்கொண்டார். விசரானைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.