வெளிநாடு அனுப்புவதாக கூறி யாழில் பண மோசடி

வெளிநாடு அனுப்பி வைப்பதாக கூறி யாழில் பெருமளவிலான பணத்தினை மோசடி செய்த  தென்னிலங்கையை சேர்ந்த குழு ஒன்று  மடக்கி பிடிக்கப்பட்டது.

யாழில் உள்ளவர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாக கூறி பெருமளவான பணத்தினை குறித்த குழு மோசடி செய்து ஏமாற்றி இருந்தது.

வெளிநாடு அனுப்புவதாக கூறி தென்னிலங்கை குழு யாழில் பண மோசடி: நன்கு கவனித்த மக்கள்

அந்நிலையில் குறித்த குழுவை சேர்ந்த ஒருவர் நேற்றுமுன்தினம் (19) வியாழக்கிழமை இரவு மண்கும்பான் வெள்ளை கடற்கரை பகுதியில் தங்கி உள்ளதாக அறிந்த நாவாந்துறை மக்கள் அப்பகுதிக்கு சென்று குறித்த நபரை மடக்கி பிடித்துள்ளனர்.

பின்னர் குறித்த நபரை நாவாந்துறை பகுதிக்கு கொண்டு சென்று அங்கு வைத்து நையப்புடைத்த பின்னர் யாழ்.பொலிசாரிடம் குறித்த நபரை கையளித்துள்ளனர்.

குறித்த நபரிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.