திமுகவில் 40 எம்எல்ஏக்கள் எங்களுடைய ஸ்லீப்பர் செல்கள் ; ராஜேந்திரபாலாஜி.!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் மறைவிற்கு பிறகு அதிமுகவில் நிகழ்ந்துவரும் குளறுபடி, சிக்கல்களுக்கெல்லாம் மத்திய பாஜகவே காரணமென அரசியல் ஆர்வலர்கள் தொடர்ச்சியாக கருத்து தெரிவித்துவருகின்றனர். அவ்வப்போது தமிழக அரசில் நிகழ்ந்துவரக்கூடிய மாற்றங்களும் மேற்கண்ட கூற்றினை நமக்கு உணர்த்துவதாக அமைக்கின்றன.

59ead0956757d-IBCTAMIL

இந்நிலையில், தேனி அருகே பெரியகுளத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய ராஜேந்திர பாலாஜி, “அதிமுகவுக்கு எந்தப் பிரச்சனை வந்தாலும் அதை பிரதமர் மோடி பார்த்துக்கொள்வார். மோடி இருக்கும் வரை அதிமுக கட்சியும் சின்னமும் நம்மிடம்தான் இருக்கும். எந்த பிரச்சனை வந்தாலும், மேலே உள்ள பிரதமர் பார்த்துக்கொள்வார்.” என தெரிவித்ததுடன், “திமுகவில் 40 எம்எல்ஏக்கள் நம்முடைய ஸ்லீப்பர் செல்கள்” எனவும் பேசினார்.

அமைச்சரின் இத்தகைய பேச்சு, தமிழக அரசியலில் பாஜக ஆதிக்கம் செலுத்திவருவது பட்டவர்த்தனமாக வெளிப்பட்டுள்ளது.