ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை: எச்சரிக்கை விடும் அமைச்சர்

கோபிச்செட்டிபாளையத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்குவதற்காக கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் சென்றிருந்தார். அங்கு நிகழ்ச்சி முடிந்தவுடன் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில், ‘மாணவர்களிடம் விரோதமாக நடந்து கொள்ளும் ஆசிரியர்கள் மற்றும் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’ என எச்சரித்துள்ளார்.

sengotaiyan_long_1_16256_11237_16477

மேலும் வரும் 24 ம் தேதி முதல் அரசு பள்ளி மாணவர்களுக்கு தனியார் நிறுவனங்கள் இலவச பயிற்சி அளிக்க உள்ளன. தலைமை ஆசிரியரிடம் பதிவு செய்தால், நீட் தேர்வுக்காக சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் நடக்கும் பயிற்சியில் மாணவர்கள் பயிலலாம் எனவும் தெரிவித்துள்ளார்.