நடிகர் விஜய் அவர்களின் ‘மெர்சல்’ படத்திலிருந்து ஜிஎஸ்டி வரி, டிஜிட்டல் இந்தியா குறித்த குறிப்பிட்ட காட்சிகளை உடனடியாக நீக்க வேண்டும் என தமிழக பாஜகவினர் கடந்த சில நாட்களாக எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். திரையுலகினர் உள்ளிட்ட பலர் பாஜகவினரின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் கமல் மெர்சல் பட சர்ச்சை குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், மெர்சலுக்கு ஏற்கனவே தணிக்கை சான்றிதழ் வழங்கப்பட்டிருக்கிறது. அதை, மீண்டும் தணிக்கை செய்ய வேண்டாம். தர்க்கரீதியான எதிர்மறை விமர்சனங்களை நேர்மறையாக எதிர்கொள்ள வேண்டும். விமர்சனங்களே இந்தியாவை ஒளிரவைக்குமென தெரிவித்துள்ளார்.