தமிழகத்தில் 3 ஆயிரம் பள்ளிகளில் ‘ஸ்மார்ட் கிளாஸ்’ எனப்படும் சிறப்பு வகுப்புகள் தொடங்க தமிழக அரசு ரூ.60 கோடி ஒதுக்கியுள்ளது. இந்த திட்டமானது அடுத்த மாதம் செயல்படுத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
3 ஆயிரம் பள்ளிகளில் இந்த ‘ஸ்மார்ட் கிளாஸ்’ எனப்படும் சிறப்பு வகுப்புகள் தொடங்கப்படும் என்று சட்டப் பேரவையில் அரசு அறிவித்ததனை தொடர்ந்தது, தற்போது அதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. மேற்கண்ட சிறப்பு வகுப்புகளுக்கான தேவையான உபகரணங்கள் வாங்குவதற்கான பணிகள் நடைபெறுவதாகவும், நவம்பர் மாத இறுதிக்குள் இந்த சிறப்பு வகுப்புகள் துவங்கப்படுமென தெரிவிக்கின்றன பள்ளிக்கல்வித்துறை வட்டாரங்கள்.