கோயில் அர்ச்சகர்களை திருமணம் செய்தால் ரூ. 4 லட்சம் – இது தெலுங்கானா அதிரடி.!

தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் ‘கல்யாண மஸ்து’ என்ற திட்டத்தை அறிமுகம் செய்ய உள்ளார். இதன் மூலம் கோயில்களில் அர்ச்சகர்களாக பணிபுரிபவர்களை திருமணம் செய்ய முன்வரும் பெண்களுக்கு திருமணத்திற்கு ரூ.1 லட்சமும், திருமணத்திற்கு பிறகு புது மண தம்பதிகள் பெயரில் வங்கியில் ரூ.3 லட்சம் டெபாசிட் செய்யப்படும், இந்த பணத்தை தம்பதியர் 3 ஆண்டுகளுக்கு பிறகு வட்டியுடன் வங்கியில் இருந்து எடுத்துக் கொள்ளலாம்.

1497716876-9601

இந்த திட்டம் வருகிற நவம்பர் 1 ஆம் தேதி அமல்படுத்தப்பட உள்ளது. தகுதி உள்ள அனைவரும் இதன் மூலம் பயன் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தெலுங்கானா மாநில அரசின் மேற்கண்ட அறிவிப்பு, அம்மாநில மக்களின் வியப்பினையும், கவனத்தையும் ஈர்த்துள்ளது என்றால் மிகையில்லை.