வாதம்-விவாதம்: அரசை விமர்சிக்கும் சினிமா, சினிமாவை விமர்சிக்கும் அரசியல் – எது சரி?

மெர்சல் படத்தில் மத்திய அரசின் ஜி.எஸ்.டி வரி, டிஜிட்டல் இந்தியா திட்டம் உள்ளிட்ட விடயங்கள் சில காட்சிகளில் விமர்சகப்பட்டுள்ளன. இது குறித்து கருத்து தெரிவித்த தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், அக்காட்சிகள் நீக்கப்படாவிட்டால் வழக்கு தொடுக்கப்படும் என்றும் அரசை விமர்சிக்க சினிமாவுக்கு தகுதி இல்லை என்றும் கூறியிருந்தார்.

மெர்சல்

இது ஆரோக்கியமான அணுகுமுறையா அச்சுறுத்தலா என்று பிபிசி ஃபேஸ்புக்கில் கேட்ட கேள்விக்கு நேயர்கள் மெர்சல் திரைப்படம் மற்றும் தமிழிசைக்கு ஆதரவாகவும் விமர்சித்தும் தெரிவித்த கருத்துக்களின் தேர்ந்தெடுத்து தொகுக்கப்பட்டவை இதோ.

சவாத் மெஸ்ஸி என்னும் பெயரில் பதிவிடுபவர் தமிழிசை இதற்கு முனைவு கூறியதாக ஒரு கருத்தை பதிவிட்டு தன் எதிர் வாதத்தை இவ்வாறு முன்வைக்கிறார்.”அச்சுறுத்தல் மட்டுமே… காரணம், காங்கிரஸ் தி.மு.க கூட்டணியில் நடந்த 2ஜி அலைக்கற்றை ஊழல் குறித்து கத்தி படத்தில் பேசியபோது , சினிமா ஆரோக்கியமான பாதையில் செல்கிறது என்றும், விஸ்வரூபம் படம் சிறுபான்மையினரை தாக்குவதாக உள்ளது என்ற போது சினிமாவை சினிமாவாக மட்டும் பாருங்கள் என்றும், விடுதலைப் புலிகள் தவறாக சித்தரிக்கப்படுவதாக ஒரு படத்திற்கு தடை கோரியபோது, அது அவர்களது கற்பனை , உங்களுக்கு வேண்டுமானால் உங்களது கற்பனையில் எடுத்துக்கொள்ளுங்கள். இத்தனையும் சொன்னது, அந்த தங்க தாரகை, தமிழிசை தான்….”

பிரதீபா பார்த்திபன் என்பவர் வேறு யாருக்கு தகுதி இருக்கிறதென்று சொன்னீர்கள் என்றால் அவர்களை கேட்கிறோம் என்று கூறியுள்ளார். “கேள்வி கேட்கிற எல்லோர் மேலேயும் வழக்கு போடுவது சினிமா வசனமாக வைத்த படத்தில் அதை நீக்கவும் இதை நீக்கவும் என்று சொல்வது..” என்று கூறி தமிழிசைக்கு முதல் நாள் முதல் காட்சி பார்க்கும் அளவுக்கு நேரம் இருக்கிறதா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Capturecvfsahgttcvf“உண்மையை சொன்னால் சில சமயம் கோபம் வரத்தான் செய்யும் ..முடிந்தால் இதுவரைக்கும் செய்த தவறெல்லாம் திருத்தி கொள்ளுங்கள் இல்லையென்றால் வேடிக்கை பார்க்கவும்.” என்றும் அவர் கூறியுள்ளார்.

“அரசை விமர்சிக்க சினிமாவிற்குத் தகுதியில்லை என்றால் வேறு எதற்கெல்லாம் தகுதியிருக்கிறது என்ற பட்டியலை வெளியிடட்டும். சினிமா இது போன்று தான் பயனிக்க வேண்டும் என்று அறிவார்ந்தவர்கள் ஏற்றுக்கொள்வார்கள்.” என்று அதே போன்ற கருத்தை கூறியுள்ளார் ஷேக் தாவூத்.

Capturenlj;;
பசியால் தவிக்கும் பல்லாயிரம் ரோஹிஞ்சா குழந்தைகள்

“சிங்கப்பூரில் அப்படி இல்லை”

“மெர்சல் படத்தில் ஜி.எஸ்.டி வரி பற்றியும், மதுபானங்களுக்கு வரி இல்லை என்றும் & சிங்கபூரில் இலவச மருத்துவம் என்றும் தவறான கருத்துக்களை கூறியுள்ளனர். நான் சிங்கபூரில் தான் இருக்கிறேன் , இங்கு இலவச மருத்துவம் என்பது கிடையாது. மேலும் மதுபானங்களின் விலையில் மாநில அரசுகளின் 50% நிகரான வரி உள்ளது. ஆகவே அவர்கள் இந்த தவறான செய்தியினை கண்டித்தது மட்டுமல்லாமல் , அந்த செய்தியினை நீக்க வேண்டும் என்று கூறுவது நியாயமான ஒன்றுதானே.. !! இதில் என்ன தவறு உள்ளது..

நடுநிலையில் உள்ள அனைவரும் இதனை உணரவேண்டும்.,” என்கிறார் ஜனத்குமார் செல்வம் என்னும் நேயர்.

அரசை விமர்சிக்கும் சினிமா, சினிமாவை விமர்சிக்கும் அரசியல் - எது சரி?

“அனைவருக்கும் உரிமை உண்டு ஆனால் உண்மையை பேச வேண்டும், சிங்கபூரில் மருத்துவம் இலவசம் என்பது பொய், இரண்டாவது மதுபானதுக்கு ஜி.எஸ்.டி வரி இல்லை என்பது, சரக்கு, பெட்ரோல் ஜி.எஸ்.டியில் சேர்க்கவில்லை ஆனால் பழைய வரி அனைத்தும் உண்டு. மூன்று கோவில்கள் பதில் மருத்துவமனை கட்டலாம் என்று விஜய் சொல்ல கூடாது,” என்று மெர்சல் படத்தில் கூறப்பட்டுள்ள விடயங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார் பொ.கருணாகரன் என்னும் பதிவர்.

பாஜகவினர் ஏதாவது ஏடாகூடமாக சொல்லிவிட்டால், அதை அவர்கள் தனிப்பட்ட கருத்து என்பார் தமிழிசை. ஆனால், இது யாரின் தனிப்பட்ட கருத்தும் இல்லை. ஒட்டுமொத்த இந்தியாவின் கருத்தும்தான் என்கிறார் பையா பிராம்ஸ்.

Capturegcdkkk

“விஐய் மட்டும் இல்லை, ஒட்டுமொத்த இந்தியாவின் கேள்விதான் இப்படத்தில் கேட்கப்படுகிறது. ஒரு சாதாரண இந்தியனின் ஏக்கம்தான் மெர்சல். இந்தியாவில் யார் வேண்டுமானாலும் தங்கள் கருத்தை கூற உரிமை இருக்கு. அவர் தனிப்பட்ட கருத்து இல்லை, ஒட்டுமொத்த இந்தியாவின் கருத்துதான் மெர்சல். இதற்கு மேல் கூற ஏதும் இல்லை.”

திரைப்படம் தணிக்கைக் குழுவினரின் சான்றிதழ் வழங்கப்பட்ட பின்னர் தான் திரையிடப்பட்டது. வேண்டாத காட்சிகளாயின் தணிக்கை செய்யப்பட்டு இருந்திருக்கும் என்கிறார் பாஸ்கரன் விஜி என்னும் பயன்பாட்டாளர்.

_98406828_mersal2

தவறை தவறென்று சொன்னால் தவறில்லை

“தவறை தவறு என்று சொல்லாமல் இருந்தால்தான் தவறு, தவறை தவறு என்று சொல்வதில் தவறில்லை. விமா்சனம் ஆரோக்கியமானது அதை ஏற்க அரசியல் கட்சிக்கும் மனமில்லை,” என்று மெர்சலுக்கு ஆதரவுக்ககுரல் எழுப்பியுள்ளார் பெருமாள் குமார்.

பிஜேபி மட்டும் எதிர்க்காமல் இருந்திருந்தால், மெர்சல் சுமார் ஹிட்டுதான், ஆனால் இப்போது சூப்பர் ஹிட்டாகிவிட்டது.

அசோக் குமார் என்னும் பயன்பாட்டாளர், “அரசியலை சினிமா விமர்சித்தால் பரவாயில்லை. அரசியல்வாதி எதற்கு சினிமா விமர்சனம் செய்கிறீர்கள். பொறுமையாக சென்று மக்களுக்கு நல்லது செய்யுங்கள்.”

விஜய்க்கு எதிர் கேள்வி!

“நேர்மையான கருத்துகளை சொல்ல முதலில் தான் நேர்மையாக இருக்க வேண்டும். விஜய் தான் வாங்கும் ஒருபடத்தின் சம்பளம் 20 கோடாயோ, 30 கோடியோ இருக்கட்டும் அனைத்துக்கும் வருமான வரி கட்டியதுண்டா. கடந்த 5 மாதங்களுக்கு முன் விஜய் வீட்டில் வருவாய்த்துறை அதிகாரிகள் 100கோடி ருபாய் கணக்கில் வராத பணம் சொத்து பத்திறங்கள் கைப்பற்றப்பட்டது. அடுத்து பெரும்பான்மை மக்கள் வாழும் சமுதாய கோவில்கள் கட்டுவதற்கு பதில் மருத்துவமனை கட்டலாமே என்பது பற்றி, சர்ச் மசூதியை கட்டுவதை விட மருத்துவமனை கட்டலாம் என்று ஏன் சொல்லவில்லை. சிங்கபூரின் அடிப்படை ஜி.எஸ்.டி வரியின் அறிவு கூட இல்லமல் விமர்சிக்கலாமா,” என்று உறுதிப்படுத்தப்படாத தகவல்களை கூறி நடிகர் விஜய்யை விமர்சனம் செய்துள்ளார் கோபி சந்திரன்.