ஆசிரியர் இருவரின் கடும் தாக்குதல்! மாணவர் ஒருவருக்கு தொடர் சிகிச்சை!

ஸ்ரீலங்காவின் சப்ரகமுவ மாகாணம் இரத்தினபுரியில் அமைந்துள்ள தேசிய பாடசாலை ஒன்றில் மாணவர் ஒருவர் ஆசிரியர்கள் இருவரின் கடும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

இதனால் 10ஆம் வகுப்பில் கல்வி கற்கும் குறித்த மாணவன் கடந்த ஒரு மாதகாலமாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதாக சொல்லப்பட்டுள்ளது.

59ead98dca8ac-IBCTAMILஇதுகுறித்து தெரியவருவதாவது,

கடந்த மாதம் 21ஆம் திகதி குறித்த மாணவர் ஆங்கில ஆசிரியர் ஒருவரை கடுமையாகத் திட்டியுள்ளதாகத் தெரிவித்து குறித்த ஆசிரியரால் பாடசாலையின் உப அதிபரிடம் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அதன்போது அவ்விருவரும் குறித்த மாணவரை தனி அறை ஒன்றுக்கு அழைத்துச்சென்று கடுமையான தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

அத்துடன், குறித்த ஆங்கில ஆசிரியரைத் திட்டிய விடயத்தை ஒப்பு கொள்ளுமாறு அச்சுறுத்தி கடிதம் ஒன்றையும் பெற்றுக் கொண்டுள்ளனர்.

இதன் பின்னர் வீடு சென்ற மாணவனுக்கு இரவிரவாக கடும் தலைச் சுற்றலும் வாந்தியும் ஏற்பட்டதனால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளார்.

ஆனாலும் இதன் பின்னர் குறித்த மாணவர் மனம் பாதிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டதனால் மன நோயாளர் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருவதாகவும் சொல்லப்பட்டுள்ளது.