சுவிட்சர்லாந்தில் பொலிசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட இலங்கை இளைஞனின் இறுதிக் கிரியைகள் நடைபெற்றுள்ளது.
சுவிட்சர்லாந்தில் வன்முறையில் ஈடுபட முயன்ற குற்றச்சாட்டில், சுவிஸ் பொலிஸாரினால் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பை சேர்ந்த சுப்ரமணியம் கரன் என்பவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
அவரது இறுதிக்கிரியையில் பங்கேற்பதற்காக கரனின் மனைவி, பிள்ளைகள் மற்றும் சகோதரன் சுவிஸ் நாட்டுக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.இதற்கான உதவிகளை சுவிஸ் அரசு மேற்கொண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.