பதுளையில் மிகவும் வறுமையான நிலையிலும் படித்து, ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் சிறப்பாக சித்தியடைந்து சாதனை படைத்துள்ளார்.
பதுளை எல்லலன்ந்த கிராமத்தில் மிகவும் வறுமைக்கும் மத்தியில் கல்வி கற்று புலமை பரீசில் பரீட்சையில் 173 புள்ளிகள் பெற்று மாணவர் ஒருவர் சித்தியடைந்துள்ளார்.
எல்லலன்ந்த வித்தியாலயத்தில் கற்கும் சுப்புன் பிரதிப் என்ற இந்த மாணவன் 57 வருட வரலாற்றில் புலமை பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த ஒரே மாணவனராவார்
நிரந்தர வீடும், தந்தையும் இல்லாத நிலையில், தாயுடன் மாமாவின் வீட்டில் வாழும் அந்த சிறுவனின் கடுமையான முயற்சியினால் இந்த வெற்றி கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கூலி தொழில் செய்து அந்த மாணவனின் கற்கை நடவடிக்கைகளை தாயார் மேற்கொண்டுள்ளார். மேலதிக வகுப்புகளுக்கு செல்லாமல் பரீட்சையில் சித்தியடைந்ததாக குறித்த மாணவன் குறிப்பிட்டுள்ளார். பாடசாலைக்கு செல்வதற்கு ஒரு பாதணியேனும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
57 வருடங்களின் கிடைத்த வெற்றி தொடர்பில் பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர்கள் மாணவனை பாராட்டியுள்ளனர்.
மிகவும் வறுமையான நிலையிலும் பரீட்சையில் சிறப்பாக சித்தி பெற்று சாதனை படைத்த குறித்த மாணவனுக்கு உதவ வேண்டியது நல்லுள்ளங்களின் கடமையாகும். விரைந்து செய்வார்கள் என நம்புவோம்.