ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளர்களாக மேலும் நால்வர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் கட்சியின் தலைவரும் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கல்விக்கு சிறந்த சேவையாற்றியமைக்காக அண்மையில் ஜனாதிபதி விருதினைப் பெற்றுக் கொண்ட கதிரவேலு செவ்வேள், தொழில்நுட்பகல்லூரி அதிபர் நவரட்ணம் யோகராஜன், தொழில் அதிபர் இராஜதுரை இரட்னேஸ்வரன், ஜெயந்தி பரமலிங்கம் ஆகியோரே ஜனாதிபதியினால் யாழ் மாவட்ட அமைப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், மாகாணசபை உறுப்பினர் அகிலதாஸ் சிவக்கொழுந்து, கந்தசாமி கருணாகரன், பாலசுப்பிரமணியம் கோபாலகிருஸ்ணன், ஆகியோர் யாழ் மாவட்ட அமைப்பாளர்களாக பதவி வகித்து வரும் நிலையில் இவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான துமிந்த திஸ்ஸாநாயக்க உட்பட கட்சியின் முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.