எச்.ராஜா மற்றும் தமிழிசை ஆகியோரின் புண்ணியத்தால், பிரதமர் மோடியும், பா.ஜ.கவும் தேசிய அளவில் எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. மெர்சல் திரைப் படத்தில் இடம் பெற்றுள்ள சில காட்சிகளை நீக்குமாறு தமிழிசை ஆரம்பிக்க அவரைத் தொடர்ந்து பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன், எச்.ராஜா போன்ற பிற பாஜக தலைவர்களும் அதை வழிமொழிந்ததால், தற்போது இந்த பிரச்சினை தேசிய அளவுக்கு போய்விட்டது. தேசிய அளவில் உள்ள அத்தனை முன்னணி ஆங்கில டிவி சேனல்கலிளும் நேற்றைய ஹாட் டாப்பிக் மெர்சல் தான்.
லட்சக்கணக்கில் ரசிகர்களை கொண்டவரும், குறிப்பாக குழந்தைகள் மற்றும் இளம் பெண்களை கவர்ந்தவருமான தமிழின் முன்னணி நடிகர் ஒருவரே நாட்டின் பிரதமர் மோடிக்கு எதிராகத்தான் உள்ளார். இது தமிழகத்தின் தற்போதைய மனநிலையை காட்டுகிறது என்ற செய்தி தேசம் முழுவதும் சென்றடைந்துவிட்டது.
இவ்வாறு பிரபலமடைந்த இந்த தகவல் என்பது பிற மாநிலங்களிலும் மோடிக்கு எதிராக கலையுலகை சிந்திக்க தூண்டும் விதமாக அமைந்துள்ளது. குஜராத், இமாச்சல பிரதேசம் போன்ற மாநிலங்களில் தேர்தல் நெருங்கும் நேரத்தில், ஜிஎஸ்டி, டிஜிட்டல் இந்தியா போன்றவற்றை பேசு பொருளாக மாற்றியுள்ளது தற்போது பாஜகவுக்குதான் பெருத்த பாதகமாக முடியும் வாய்ப்புள்ளது. இதற்கெல்லாம் முக்கிய காரணம், சும்மா கிடந்த சங்கை ஊதிக்கெடுத்த நமது தமிழக பாஜக தலைவர்கள்தான். இத்தகைய புகழ் அவர்களுக்குத்தான் சேரும்.
மெர்சலில் தப்பான புள்ளி விவரங்கள் உள்ளது என்பது எங்களுக்கும் தெரியும். ஆனால் அது பா.ஜ.கவை தாக்கும் படம் என்பதால் நாங்கள் ஆதரிப்போம் என்று ஒருவர் கூறியுள்ளார்.
பாஜகவுக்கு இனி எல்லா பக்கமும் வேட்டுதான் என்று கூறும் விதமாக அமைந்துள்ள இந்த பதிவு, கமல் நடிப்பில் வெளியாகவுள்ள இந்தியன்2 படம்தான் அடுத்த வேட்டு என்பதை போன்று வெளியிடப்பட்டுள்ளது.