பட்டினியால் சிறுமி இறந்ததின் எதிரொலி, ரேஷன் பொருள் வாங்க ஆதார் கட்டாயம் இல்லை:

ஜாம்ஷெட்பூர்: ஜார்க்கண்ட் மாநிலம் கரிமதி கிராமத்தில் 11 வயது சிறுமி கடந்த மாதம் 28ம் தேதி இறந்தாள். இவரது குடும்பத்தினருக்கு ரேஷனில் பொருட்கள் வழங்க மறுக்கப்பட்டதால், சிறுமி பட்டினியில் வாடி உயிரிழந்ததாக குற்றம் சாட்டுகின்றனர். ஏழ்மை நிலையில் உள்ள சிறுமியின் குடும்பத்தினர் ஆதார் எண் பெறவில்லை. ஆதாரை இணைக்காத ரேஷன் கார்டுகளுக்கு பொருட்கள் வழங்கப்படுவதில்லை. அதன்படி, சிறுமியின் குடும்பத்தினருக்கு கடந்த 6 மாதமாக ரேஷன் பொருள் வழங்கப்படாமல் இருந்தது. தொடர்ந்து 8 நாளாக பட்டினியில் வாடிய சிறுமி உயிரிழந்ததாக கூறப்பட்டசம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

xaadhaar-card312-34600-29-1483014885.jpg.pagespeed.ic.fQRC5r4_Xpஇந்நிலையில், ரேஷன் பொருட்கள் வாங்க ஆதார் கட்டாயமில்லை என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. மாநில உணவுத்துறை அமைச்சர் சர்யு ராய் நேற்று அளித்த பேட்டியில், ‘‘ரேஷன் பொருட்கள் வாங்க ஆதார் கட்டாயமில்லை. டிரைவிங் லைசென்ஸ், வாக்காளர் அடையாள அட்டை என ஏதாவது ஒரு சான்றுடன் ரேஷன் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம்’’ என அறிவித்துள்ளார்.