காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல் ராணுவ ஊழியர் பலி!

நகர்: காஷ்மீரில் தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. நேற்றும் பாகிஸ்தான் ராணுவம் எல்லை தாண்டி தாக்குதலில் ஈடுபட்டது. பாரமுல்லா மாவட்டம் கமால்கோட் பகுதியில் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ராணுவ ஊழியர் கொல்லப்பட்டார். ஒரு சிறுமியும் படுகாயம் அடைந்தார். அவர் உரி நகரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தான் ராணுவத்திற்கு இந்திய படைகள் தகுந்த பதிலடி கொடுத்தனர். இருதரப்பினர் இடையே நீண்ட நேரம் துப்பாக்கிச்சூடு நடந்தது.

201705030918206403_Pakistan-Violates-Ceasefire-Again-at-Krishna-Ghati-Sector-of_SECVPF