பதவி நீக்கப்படுகிறாரா மகிந்த ராஜபக்ச?

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆகிய கட்சிகளின் பதவிகளில் இருந்து மகிந்த ராஜபக்ச நீக்கப்படலாம் என்று தெரியவருகிறது.

Mahinda-Rஉள்ளூராட்சித் தேர்தல்களுக்கான முஸ்தீபுகள் ஆரம்பித்துள்ள நிலையில், அரசியல் கட்சிகள் அது குறித்து ஆராய்வதற்காக கட்சி நிர்வாகிகளின் கூட்டங்களை நடத்த ஆரம்பித்துள்ளன.

அதன்படி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிலும் நிர்வாகிகள் சந்திப்பு நடத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், தேர்தல் குறித்து நடத்தப்படும் கட்சிக் கூட்டங்களுக்கு சமுகமளிக்காதவர்கள் கட்சியின் பதவிகளில் இருந்து நீக்கப்படுவார்கள் என்று, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும், கட்சியின் அமைப்பாளர் பதவியில் இருந்துகொண்டு கட்சி சார்பில் செயற்படாத சிலரை அண்மையில் அக்கட்சி பதவி நீக்கம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி எடுக்கும் முடிவுகளுக்கு அக்கட்சி சார்பில் பாராளுமன்றத்துக்குத் தெரிவாகியிருக்கும் உறுப்பினர்கள் கட்டுப்பட வேண்டும் எனவும், மறுப்பவர்கள் தங்களது பதவிகளை இழக்க வேண்டியிருக்கும் எனவும் துமிந்த திசாநாயக்க தெரிவித்தார்.