மெர்சல் படம் திரைக்கு வந்து ரசிகர்கள் தாண்டி பிரபலங்களையும் கவர்ந்துள்ளது. இப்படம் பல சர்ச்சைகளை சந்தித்து வருவதால் அப்படி படத்தில் என்ன இருக்கிறது என்று ஆர்வம் மக்களிடையே பெருகியது.
இந்நிலையில் இன்று மெர்சல் படத்தை நடிகை கவுதமி கண்டுகளித்துள்ளார். மெர்சல் படத்தை பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில், “மெர்சல் படத்தை பார்த்தேன் சென்சார் போர்டு கொடுத்த யு / ஏ சரியானது.
இந்த படம் எல்லா இந்தியா வாழ் மக்களுக்கு இலவச மருத்துவம் உடனடி தேவை என்ற சொல்லப்படும் கரு மிக அவசியமானது” என்று தெரிவித்துள்ளார்.