மனித முகம் கொண்ட மிருக குட்டி :உண்மையில் நடந்தது இதுதான்!

மலேசியாவில் மனித முகம் கொண்ட மிருக குட்டி இருப்பதாக சமூகவலைத்தளங்களில் புகைப்படங்கள் அண்மையில் வெளியாகிருந்த நிலையில் அது பற்றி உண்மையை மலேசிய பொலிஸார் வெளியிட்டனர்.

பிறந்த குழந்தை போன்ற தோலுடன் தலையில் கறுப்பு நிற முடிகளுடன் விலங்கை போன்ற முக அமைப்பு கொண்ட புகைப்படம் முகப்புத்தகத்தில் வெளியிடப்பட்டு அது மலேசியாவின் பகாங் பகுதியில் இருக்கும் மிருக குட்டி என  தகவல்கள் வெளியாகின.

மனித முகம் கொண்ட மிருக குட்டி :உண்மையில் நடந்தது இதுதான்!

இந்நிலையில்  இது போலியான ஒன்று என மலேசிய பொலிசார் விளக்கம் அளித்துள்ளனர்.

விலங்கு முக அமைப்பு கொண்ட கூர்மையான பற்கள் உடைய சிலிக்கான் பொம்மை இது என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

எப்போதும் கண்களை மூடியிருக்கும் இந்த பொம்மை, யாராவது தொட்டாலோ கைகளில் வைத்திருக்கும் போதோ ஒலி எழுப்புமாம்.