இலங்கையின் வடக்கே வவுனியா, மில் வீதி பகுதியில் இளைஞர் ஒருவரின் சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் உள்ள வீடு ஒன்றிலேயே குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இன்று இரவு (Oct-21) 8.30 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் குறித்த இளைஞர் வங்கி ஒன்றின் ஊழியர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்துதெரியவருவதாவது,
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அரச வங்கியொன்றில், வவுனியாவை சேர்ந்த கிருபராசா ஜேசுதாஸ் (வயது- 33) என்பவர் பணிபுரிந்துவந்த நிலையில் நேற்றையதினம் வவுனியாவிற்கு வந்துள்ளார்.
இந்நிலையில் இன்று மாலை தனது நண்பர்களுடன் கதைத்துக் கொண்டிருந்துள்ளார். வீட்டில் உள்ளவர்கள் இரவு நேரம் தேவாலயத்துக்குச் சென்றிருந்த நிலையில், கடிதம் ஒன்றை எழுதிவிட்டு தூக்கில் தொங்கியுள்ளார்.
வீட்டார் அனைவரும் தேவாலயத்திலிருந்து திரும்பி வந்தபோது ஒரு அறையில் குறித்த இளைஞரின் சடலமும் இன்னோர் அறையில் கடிதமும் இருப்பதுகண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதோடு தற்பொழுது விசாரணைகள் இடம்பெற்றுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.