அமெரிக்காவின் வோஷிங்டன் மாநிலத்தில், யுவதிகள் மூவரும் இளைஞர் ஒருவர் கடற்கன்னிகளாக வேடமணிந்து தொழில்புரிகின்றனர்.
கெய்ட்லின் நீல்சன், டெசி லமோரியா, மோர்க்ன் கால்ட்வெல் ஆகிய யுவதிகளும் எட் பிரவுண் எனும் இளைஞருமே இந்நால்வரும் ஆவர்.
வோஷிங்டன் மாநிலத்தின் தலைநகர் சியாட்டிலில் இவர்கள் கடற்கன்னிகளாக நீந்தி பார்வையாளர்களை மகிழ்விக்கின்றனர்.
கெய்ட்லின் நீல்சன், உயிரியில் பட்டதாரி ஆவார். தான் செய்து கொண்டிருந்த வேலையிலிருந்து 2015 ஆம் ஆண்டு ராஜினாமா செய்துவிட்டு கடற்கன்னியாக தொழில் புரிய ஆரம்பித்தார். தற்போது அவர் சியனியா கடற்கன்னி என அழைக்கப்படுகிறார்.
இவர் பிறக்கும் போது ஒரு காலில் குறைபாடு இருந்தது. தற்போது அவர் காலால் நடப்பதைவிட கடற்கன்னி வாலைப் பொருத்திக் கொண்டு நீந்துவதில் மகிழ்ச்சியடைவதாகக் கூறுகிறார்.
32 வயதான கெய்லின், ஏரிகளில் நீந்தி புகைப்படங்கள், வீடியோக்களுக்கு போஸ் கொடுக்கிறார்.
அத்துடன் கடற்கன்னி வால்களை தயாரிப்பதற்கான பயிற்சி வகுப்புகளையும் நடத்துகிறார்