இலங்கையில் அடையாள அட்டை பெறுவதற்கு தகுதியான பிரஜைகளுக்கு மகிழ்ச்சியான செய்தியொன்றை உள்நாட்டலுவல்கள் அமைச்சு வெளியிட்டுள்ளது.
அந்த வகையில், ஒரே நாளில் தேசிய அடையாள அட்டை பெற்றுக்கொள்வதற்கு இனி கொழும்பிற்கு வரத் தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட மட்டத்தில் தேசிய அடையாள அட்டைகளை பெற்றுக் கொள்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றதுடன், தேசிய ஆட்பதிவு திணைக்களத்தின் கொழும்பு அலுவலகத்தின் பணிகள் பண்முகப்படுத்தப்பட உள்ளன.
இதன்படி, மாவட்ட மட்டத்தில் தேசிய அடையாள அட்டைகளை பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் வஜிர அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
மாவட்டச் செயலகங்களில் ஒருநாள் சேவையின் அடிப்படையில் தேசிய அடையாள அட்டைகளை பெற்றுக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பில் உள்விவகார அமைச்சர் எஸ்.பி.நாவின்னவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதிலும் தேசிய அடையாள அட்டை இல்லாத பத்து இலட்சம் பேர் உள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.