ஒன்ராறியோவின் பெரும்பாலான பகுதிகளில் வழக்கத்துக்கு மாறான காலநிலை!

ஒன்ராறியோவின் பெரும்பாலான பகுதிகளில் வழக்கத்தை விட 10 முதல் 50 சதவிதம் அதிகமான பனிப்பொழிவு காணப்படும் என அமெரிக்காவின் வானிலை முன்னறிவிப்பு சேவை எச்சரிக்கை விடுத்துள்ளது.

குறிப்பாக மத்திய-தெற்கு ஒன்ராறியோ கியுபெக் தென்பகுதி வரை குறித்த பனிப்பொழிவு காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

images (70)டிசம்பர் இறுதி தொடக்கம் எதிர்வரும் ஆண்டு பெப்ரவரி மாதம் வரை இந்த பனிப்பொழிவு காணப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், வின்ட்சர் ஒன்ராறியோ முதல் ரொறொன்ரோ வரை குறிப்பிடத்தக்க அளவிலான பனிப்புயல் காணப்படும் எனவும் ஒட்டாவா மொன்றியல் பகுதிகளில் ஜனவரி மற்றும் பெப்ரவரி மாத காலப்பகுதியில் விசேடமாக காணப்படும் எனவும் கூறப்படுகின்றது.