ஆறு வயதில் பாதுகாப்பு எச்சரிக்கை! இன்று தனது பெயரை தெளிவாக்க ஒட்டாவா செல்லும் கனடிய சிறுவன்!

இரண்டு வருடங்களிற்கு முன்னர் ஹொக்கி விளையாட்டு ஒன்றிற்கான பயணத்தை மேற்கொண்ட போது ரொறொன்ரோ பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக இரண்டு வருடங்களிற்கு முன்னர் நிறுத்தப்பட்ட சிறுவன் அடம் அஹ்மட் தனது பெயரை தெளிவு படுத்தும் பொருட்டு நூற்றுகணக்கானவர்களுடன் பாராளுமன்றம் நோக்கி புறப்பட்டுள்ளான்.

கனடாவின் சர்ச்சைக்குரிய பயண தடை பட்டியலில் தவறான முறையில் சேர்க்கப்பட்டவர்களின் பெயர்களை அகற்றும் பொருட்டு அழைக்கப்பட்டவர்கள் மட்டும் அடங்கிய துணை கமிட்டி ஒன்றை வெள்ளிக்கிழமை பூட்டிய அறை ஒன்றில் சந்தித்துள்ளான்.

அடுத்த மாதம் அஹ்மட் மற்றும் அவனது பெற்றோர் ஒட்டாவா சென்று கீழ் சபையில் மனு ஒன்றை கையளிக்க உள்ளனர். அத்துடன் இவர்களிற்கு ஆதரவு அளிக்கும் சகல் கூட்டாட்சி கட்சியை சேர்ந்த 150 பாராளுமன்ற அங்கத்தவர்களின் கடிதங்களையும் சமர்ப்பிக்க உள்ளனர்.

Capturewsreuyஅடத்துடன் ஆரம்பித்த இந்த முயற்சி மிக பெரிய அளவை எட்டியுள்ளதென கூறப்படுகின்றது. கனடா பூராகவும் நூற்றுக்கணக்கான பிள்ளைகள் மற்றும் ஆயிரக்கணக்கான வயதானவர்கள் பயணத்தடையினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.