எங்களுக்கு விஜய் அவசியமில்லை… தமிழிசை சவுந்திரராஜன் ஆவேசம்

tamilisai-14-1505384452நடிகர் விஜயை வளைத்துபோட்டு அரசியல் செய்யவேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் மத்திய அரசு கொண்டுவந்துள்ள மக்கள்நல திட்டங்களை திரித்து சொல்வதையே சிலர் வாடிக்கையாக கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

எங்களுக்கு விஜய் அவசியமில்லை… தமிழிசை சவுந்திரராஜன் ஆவேசம்

மேலும் சரக்கு மற்றும் சேவை வரி என்பது மதிப்பு கூட்டு வரி அல்ல என்றும் அது வரி குறைப்பு நடவடிக்கை எனவும் தமிழிசை தெரிவித்துள்ளார். மெர்சல் படத்தில் மத்திய அரசுக்கு எதிராக சொல்லப்பட்டுள்ள கருத்துக்களை நீக்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர்கள் தொடர்ச்சியாக தெரிவித்து வந்தனர். இந்நிலையில் மெர்சல் படத்தை ஒரு பிரச்சனையாக எடுத்துக்கொண்டு பாஜக தேவையில்லாத அரசியலை செய்து வருவதாக எதிர்க்கட்சி குற்றம்சாட்டி வருகின்றன.